×

தெருவில் கிடந்த 23 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த உசிலம்பட்டி முதியவர்: பொதுமக்கள் பாராட்டு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தெருவில் கிடந்த 23 பவுன் நகையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, காந்தி விடுதி அருகே குடியிருப்பவர் நாகராஜ் (68). இவர் நேற்று பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் நடந்து சென்றார்.  அப்போது தெருவில் ஒரு துணிப்பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது, 23 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் முன் வைப்பு தொகைக்கான பாண்ட் ரசீது, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புத்தகம் ஆகியவை இருந்தது. உடனே கூட்டுறவு வங்கிக்கு சென்று, வங்கி மேலாளர் சிவகுமாரிடம் நகை மற்றும் பாண்ட் ரசீதை ஒப்படைத்தார்.

இதையடுத்து, வங்கியின் வாடிக்கையாளரும், நகையை தவறவிட்டு தேடி கொண்டிருந்தவருமான உசிலம்பட்டி அருகே வில்லாணியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சின்னச்சாமியை அழைத்து, அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தார். கீழே கிடந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்திற்கான பாண்ட் ரசீதை வங்கியின் உதவியுடன் உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த முதியவர் நாகராஜனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். விசாரணையில், சின்னச்சாமி நகை மற்றும் பாண்ட் ரசீதை வங்கி லாக்கரில் வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே தவறி விழுந்தது தெரியவந்தது.



Tags : Usilampatti old man who handed over 23-pound jewel lying on the street to its owner: public praise
× RELATED யானை தாக்கி விவசாயி பலி