திருவாரூர் அருகே அனுமதியின்றி வீட்டில் தயாரித்த நாட்டு வெடிகள் பறிமுதல்; வெடி ஆலை ஊழியருக்கு வலை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு காட்டை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (55). வேதாரண்யத்தை அடுத்த வாய்ேமட்டில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். ஓய்வு நேரத்தில் வீட்டிலேயே அனுமதியின்றி நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இதையறிந்த முத்துப்பேட்டை போலீசார் இன்று காலை, கல்யாண சுந்தரம் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த வாண வெடிகள், சணல் வெடிகள், பைப் சணல் வெடிகள், பேப்பர் ஷாட் உள்ளிட்ட வெடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான கல்யாண சுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Related Stories: