நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி - 20 கிரிக்கெட் போட்டி மழையால் டை ஆனதால் தொடரை வென்றது இந்தியா..!!

நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி - 20 கிரிக்கெட் போட்டி மழையால் டை ஆனதால் இந்தியா தொடரை வென்றது. நேப்பியரில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மழையால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணி பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கான்வே 59, பிலிப்ஸ் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Related Stories: