ஏரிகளுக்கு மழைநீர் வரத்து குறைவு: செம்பரம்பாக்கம்-புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. தற்போது ஏரியில் 2509 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் இந்த 2 ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு மழைநீர் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 50 கனஅடி தண்ணீர் மட்டும் வருகிறது. நீர் மட்டம் 18 அடிக்கும்(மொத்த உயரம்21அடி) கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு இன்று காலை நிறுத்தப்பட்டது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. தற்போது ஏரியில் 2509 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து 100 கனஅடியாக சரிந்தது. நீர் மட்டம் 20 அடிக்கும் கீழ்(மொத்த உயரம்24 அடி) சென்றதால் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஏரியில் தற்போது 2491 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: