வாலாஜா பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கழிவுகள்-சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி

வாலாஜா :  வாலாஜா பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கோழி இறைச்சி மற்றும் குப்பைக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாலாஜா அடுத்த தேவதானம் பகுதி உள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருசக்கர வாகன‌ ஓட்டிகளும் பிரதானமாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், தேவதானம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் காற்று வீசும்போது அந்த குப்பைகள் சாலையின் நடுவே வருவதால் பைக்கில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே, தேவதானம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் தொடர்ந்து குப்பைக்கழிவுகளை கொட்டும் நபர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: