ஈரோட்டில் வாகன சோதனையில் நிற்காமல் இருசக்கர வாகனத்தை எஸ்.ஐ. மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 2 இளைஞர்கள் கைது..!!

ஈரோடு: ஈரோட்டில் வாகன சோதனையில் நிற்காமல் இருசக்கர வாகனத்தை எஸ்.ஐ. மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வேகமாக வந்த இளைஞர்கள் பைக்கை நிறுத்தாமல் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். பைக் மோதி கீழே விழுந்த உதவி ஆய்வாளர் கிருஷ்ணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் மீது பைக் ஏற்றி விபத்தை ஏற்படுத்திய கமலேஷ், ராகவன் ஆகியோரை கருங்கல்பாளையம் போலீஸ் கைது செய்தது.

Related Stories: