ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மூட ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் செட்டியமடையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. மதுபானக் கடையை சுற்றி கோயில்கள், கல்வி நிறுவனங்கள் இருந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி கடை இடமாற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் அதே இடத்தில் மதுபான கடையை டாஸ்மாக் நிர்வாகம் திறந்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: