×

கேரளாவில் பிரேசில், அர்ஜென்டினா அணி கால்பந்து ரசிகர்கள் இடையே பயங்கர மோதல்: வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கொல்லம்: கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ந் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

உலக கால்பந்து போட்டி தொடங்கி நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டினர். அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லத்தில் கால்பந்து உலகக்கோப்பை தொடரையொட்டி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேரணியில் திடீரென பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் எத்தனை பேருக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரு அணி ரசிகர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த மோதல் தொடர்பாக புகார் ஏதும் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கால்பந்து ரசிகர்கள் மோதிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags : Brazil ,Argentina ,Kerala , Fierce clash between Brazil and Argentina football fans in Kerala: Video goes viral on social media
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...