×

அகவிலைப்படி உயர்வு கோரி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்

சென்னை : அகவிலைப்படி உயர்வு கோரி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை சிஐடியூ தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். சென்னையின் தடுப்புகளை அகற்றிய பஸ் ஊழியர்களுக்கு காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மண்டலா போக்குவரத்து கழக அலுவலகத்தை குடுமபத்துடன் பஸ் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். கொரோனா காலத்தில் பணியாற்றியோருக்கு சிறப்பூதியம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஒய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பணபலன்களை வழங்க வலியுறுத்தியுள்ளனர். 7 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள  அகவிலைப்படியை தர கோரிக்கை விடுத்துள்ளனர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் அதிகமான வருவாய் ஈட்டும் துறையான போக்குவரத்து துறையில் ஏகப்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பயனுள்ள துறைகளில் ஒன்றான போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மற்ற அரசு துறை ஊழியர்களை போல எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என பல மாதங்களாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க இருக்கும் நிலையில் அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது.

அதனால் மற்ற அரசுத் துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது போல அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். மேலும் சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை சிஐடியூ தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.



Tags : Tamil Nadu ,Chennai , Government bus workers are protesting in various districts of Tamil Nadu, including Chennai, demanding an increase in fares
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...