×

திராவிட மாடல் ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழகம்: அமைச்சர் சேகர்பாபு சூளுரை

சென்னை: சென்னை மேற்கு மாவட்டக் கழக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; இந்தத் தொகுதியினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நிகழ்விற்கு வர இயலவில்லை என்பதையும் உணர்ந்து, நான் சந்தித்த பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் என்றாலும் சரி. அல்லது சமீபத்தில் நடந்து முடித்த சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் சரி, இடையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி.

இந்தத் தேர்தல்களில் எல்லாம் கழகத் தலைவர் தளபதி அவர்கள் ஒப்படைத்த வேலையை, கச்சிதமாக முடித்து, இயக்கத்திற்கு வலு சேர்த்த, தற்பொழுது இந்த அரங்கத்தில் கீழே அமர்ந்திருக்கக்கூடிய அருமைத் தம்பி கார்த்திக் அவர்களே, மற்றும் திரளாக இந்த நிகழ்வில் பங்கேற்று இருக்கின்ற மாநில நிர்வாகிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கட்டுரையில் ஒரு வாசகத்தைச் சொல்வார்கள், மாளிகை அவன்தான், முகப்பும் மண்டபமும் அவன்தான் மையகொடி ஏற்றுபவனும் அவன்தான் கொடி கட்டுபவனும் அவன்தான் அவன் ஆடினால், இந்த இயக்கம் ஆடும் அவன் அடங்கினால், இந்த இயக்கம் அடங்கிவிடும் என்பார்கள்.

அந்த இயக்கத்தின் ஆட்டத்திற்கு உரியவர்களாக இங்கே எதிரிலே அமர்த்துக் கொண்டிருக்கின்ற செயல்வீரர்களாகிய உங்களை நான் மீண்டும் வணங்குவதில் பெருமை அடைகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான், ஜனநாயகத்தின் பால்  நம்பிக்கை கொண்டு, ஜனநாயக ரீதியாக உட்கட்சித் தேர்தல் ஒன்று நடைபெறுகிறது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் நடந்தேறுகிறது. அந்த வகையில் 15 ஆவது உட்கட்சித் தேர்தல், கனக் கச்சிதமாக தமிழக முதலமைச்சர் ஆளுங் கட்சியாக இருக்கின்ற சமயத்தில் நடைபெறுகின்ற தேர்தலின்போது, பல இடங்களில் போட்டா போட்டிகள் ஏற்படும்;

தேவையற்ற பிரச்சினைகள் வரும் என்று கருத்துகள் பரிமாறப்பட்ட நிலையில், எங்கும் துளி அசம்பாவிதம் இல்லாமல், தன்னுடைய நிர்வாகத் திறமையால், 15 ஆவது உட்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தலை கனக்கச்சிதமாக செய்து முடித்த பெருமை கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு உண்டு. தேர்தல் முடித்த கையோடு கழகத் தலைவர் தளபதி அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டினார். அப்பொதுக்குழுவிலே ஓர் அறிவுரையை எடுத்துச் சொன்னார். அந்த அறிவுரை என்பது இன்னொரு நூறாண்டுகளுக்குக் கல்வெட்டாய் நிற்கின்ற வாசகங்கள். கழகத் தலைவரின் அந்த அறிவுரை என்பது, நம்மை ஒருமுகப்படுத்துகின்ற அறிவுரை.

ஒருவரை ஒருவர் பார்த்து, பேசுகின்ற பழக் கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்றார். ஒருவரை ஒருவர் பார்த்து, பேசுகின்ற பழக்கத்தோடு நின்றுவிடாமல், இன்று புதிதாகப் பதவிக்கு வந்தவர்களை, ஏற்கெனவே பதவியில் இருப்பவர்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்றார். கழகத் தொண்டனுடைய தேவைகளை நிறை வேற்றவேண்டும் என்றும், கழக உறுப்பினர் யாராவது தேவை என்று வந்தாலும், அதை நிறைவு செய்யவேண்டும் என்று அந்தப் பொதுக் குழுவிலே பறைசாற்றினார். இந்த முத்தான மூன்றை எடுத்துப் பார்க்கின்றபொமுது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக்கழகத் தலைவராக இருந்தபொமுது, இரண்டாம் முறையாக நாவலரை, இந்த இயக்கத்திற்குப் பொதுச்செயலாளராக அறிவித்து, தம்பி வா! தலைமையேற்க வா! உன் ஆணைக்கு நான் கட்டுப்படுகிறேன் என்றார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இதை மேடையில் சொல்லிவிட்டு, இறங்குகின்றபொழுது. நாவலர் எதிரில் வருகின்றார். நாவலரை, பேரறிஞர் அண்ணா அன்னாந்து பார்க்கின்றார்; நாவலர் மேடைக்குப் போகின்றார். உடனடியாக ஓடிவந்து, அண்ணா அவர்கள் மைக்கைப் பிடித்து, கட்சி இன்றைக்கு நிமிர்ந்து நிற்கின்றது என்றார். தளபதியின் ஆட்சியில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழகம்! அன்றைக்கு அண்ணா அவர்கள் வார்த்தை, இன்றைக்குத் சொன்ன திராவிட மாடல் ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற தளபதி அவர்களுடைய தலைமையில், தமிழகம் இன்றைக்கு  தலை நிமிர்ந்து நிற்கின்றது பொருள்பட விளக்கமாகக் கூறியிருக்கின்றார். நம்முடைய இயக்கத்தி னுடைய தலைவர் யார்?

நம்முடைய இயக்கத்தை வழிநடத்திச் செல்லுகின்றவர் யார்? இன்றைய தமிழக முதல் அமைச்சர் யார்? பல தலைவர்கள் அறிக்கையின் வாயிலாக ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் தான், அறிக்கை விடுவதும், ஆணைகள் பிறப்பிப்பதும், அதோடு நின்றுவிடாமல், களத்திற்கு வந்து நம்மோடு நின்று போராடக் கூடிய ஒரு தலைவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டு இருக்கின்றேன். தலைவர் அவர்கள் ஒருமுறை கூட்டத்திலே சொன்னார்,

உங்களை முன்னால் செல்லவிட்டு, நான் பின்னால் வருகின்ற தலைவன் அல்ல நான். உங்களோடு ஒன்றாக இணைந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு, உங்களோடு நடந்துவந்து, உங்களில் ஒருவனாக இருக்கின்ற தலைவர் என்று கூறிய ஒரே தலைவர், இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கின்றார் என்றால், தமிழக முதலமைச்சரை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. பல இயக் கங்களில் போனவுடன், ஒரு மாதம், இரண்டு மாதக் காலங்களில் பொறுப்புகளை வழங்கிவிடுவார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டும் தான், உறுப்பினராக இருப் பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்.

ஏனென்றால், இந்த இயக்கம் என்பது ஓர் ஆலமரத்தின் வேரைப் போன்றவர்கள்; இந்த இயக்கத்தில் இருக்கின்ற நிர்வாகிகளான நாமெல்லாம் அதனுடைய விழுதுகள் போன்றவர்கள். இந்த இயக்கத்திற்கு என்று ஒரு பெருமை உண்டு. இந்த இயக்கத்திற்கு என்று ஒரு தனி சரித்திரம் உண்டு. இந்த இயக்கத்திற்கென்று இருக்கின்ற சரித்திரங்களையும், பெருமைகளையும் தூக்கி நிறுத்துகின்ற தலைவராக, இந்த இயக்கத்தினுடைய இரு வண்ணக் கொடியை, இந்த இயக்கத்தினுடைய சின்னமான உதயசூரியனை தகத்தகாயமாக ஒளிர வைக்கின்ற தலைவராக, நம்முடைய தலைவர் தளபதி அவர்கள் இருக்கின்ற வரையில், தமிழகத்தில் எத்தனை சங்கிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும், எத்தனைக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும், இந்த இயக்கத்தை ஆட்டிப் பார்க்கவோ, அசைத்துப் பார்க்கவோ முடியாது.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இங்கே எட்டுத் நிறைவேற்றப் தீர்மானங்கள் பட்டு இருக்கின்றது என்று சொன்னார்கள். அந்த எட்டுத் தீர்மானங்களில், நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தேவையான தீர்மானம், ஏழாவது தீர்மானமாகும். ஏனென்றால், அந்த ஏழாவது தீர்மானத்தில்தான் குறிப்பிட்டு இருக்கின்றார்கள், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று. நிறுத்தப்படுகின்ற வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஏழாவது தீர்மானதில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஆம்! வெற்றி பெறச் செய்யவேண்டும். எதிர்க் கட்சியாக இருந்தபொழுதே, ஆளுங்கட்சியினுடைய படை பலத்தை, அதிகார துஷ்பிரயோகங்களை, பணத் திமிரினை, ஜனநாயகத்தை பணநாயகத்தால் வென்றுவிடலாம் என்று எத்தனித்தவர்களை.

புறமுதுகிட்டு ஓடச் செய்து, 3 லட்சத்து 337 வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய நாடாளுமன்ற உறுப் பினரை வெற்றி பெறச் செய்தோம். இந்த முறை நாம் காட்டுகின்ற பரிவு இயக்கத்திற்கு நாம் செலுத்துகின்ற நன்றிகள் என்னவாக - இருக்க வேண்டும் என்றால், இயக்கத்திற்கு நாம் அளிக்கின்ற கொடை என்னவாக இருக்கவேண்டும் என்றால், சென்ற முறை நாம் பெற்ற வாக்குகளைவிட, கூடுதலாக 6 லட்சம்     வாக்குகள் வித்தியாசத்திலாவது, நாடாளுமன்றத் தேர்தலில் யார் நிறுத்தப்பட்டாலும், அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்ற இலக்கோடு நாம் களத்திலே பணியாற்றவேண்டும். அந்தக் களத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினருடைய ஏவுகணைகளாக இருக்கின்ற ஆனந்த் அவர்களும், கவுதம் அவர்களும் உறுதுணையாக இருப்பார்கள் என்று இந்த நேரத்தில் தான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இந்த நிகழ்ச்சி என்பது, ஏதோ சம்பிரதாயத்திற்காக கூட்டப்பட்ட நிகழ்ச்சியல்ல. திராவிட முன்னேற்றக் கழக வீரர்கள் என்பவர்கள், ஏதோ இயக்கத்திற்கு வருவதும் போவதுமாக இருப்பவர்கள் அல்ல; போர்ப்படையைச் சார்ந்தவர்கள். இது ஒரு போர்ப் படை. இந்தப் படைகளில் இருப்பவர்கள் ஒவ்வொரு வரும் சிப்பாய்களாக மாற வேண்டிய காலகட்டத்தை நாம் இன்றைக்குச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மைப் பொறுத்தவரையில், ஓர் இயக்கத்தினுடைய கொள்கைகள், கோட்பாடுகள், இலட்சியங்களை ஒரு தேர்தலிலே மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்றாலும், அந்த இயக்கத்திலுடைய பெருமைகளை, அந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்து கின்றவர்களுடைய புகழை கொண்டு சேர்க்கவேண்டும். அப்படி என்றால், இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்துகின்ற நம்முடைய கழகத் தலைவரைப் போல், இந்தியத் திருநாட்டிலே.

எந்த மாநிலத்திலும், இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கின்ற நம்முடைய முதலமைச்சரைப் போல், இந்தியாவில் ஒருவரைகூட சுட்டுவிரல் காட்ட முடியாது. அதேபோல், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒருவரை, இந்தியா முழுவதும் காட்டவேண்டும் என்றால், தமிழக முதலமைச்சரைத்தான் முன்மாதிரியாகக் காட்டக் கூடிய அளவிற்கு உழைக்கின்ற ஒரே முதலமைச்சர், நம்முடைய முதலமைச்சர். இன்று நம்முடைய தேவை என்ன? பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், இந்த இயக்கத்தினுடைய தலைவராக வருகின்றபொழுது, அவருடைய அப்பொழுது வயது 40. அப்போது கலைஞர் அவர்களுடைய வயது 25. அன்றைக்கு இருந்த நாவலர் அவர்களுடைய வயதை எடுத்துக்கொண்டாலும் சரி மதியழகனுடைய வயதை எடுத்துக்கொண்டாலும் சரி, அனைவருடைய வயதும் 30 ஐ தாண்டவில்லை.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்த இலைமுறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இன்னொரு கால் நூற்றாண்டுகளுக்கு இந்த இயக்கத்தை அசைக்க முடியாத அளவிற்கு கழகத் தலைவர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கின்றார். அப்படி உருவாக்கித் தந்திருக்கின்றார் என்றால், இன்றைக்கு இளைஞர்களை ஈர்க்கின்ற வல்லமைப் பெற்றவராக நம்முடைய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்ந்து கொண்டிருக் கின்றார். அந்த இளைஞர்களை நம்முடைய இயக்கத்திற்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பேச்சளவில் நில்லாமல், வருகின்ற இளைஞர்களுக்கு, எங்களைப் போன்ற மூத்தவர்கள் வழி விடுவதோடு அல்லாமல் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி. அவர்களும் களப்பணியும், கழகப் பணியையும் ஆற்று நின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருகின்ற கூட்டமாகத்தான் இந்தக் கூட்டத்தை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

திராவிட மண்ணிலே திராவிடம்தான் ஆளவேண்டும் என்றால், இயக்கத்தினுடைய இரு வண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவேண்டும் என்றால், அதிலும் துடிப்புமிக்க இளைஞர்கள் இயக்கத்திற்குத் தேவை. அந்த இளைஞர்களை வரவேற்கின்ற ஒரு கூட்டமாக இந்தக் கூட்டத்தை நான் முன்னிலைப்படுத்தி, இந்தக் கூட்டத்திலே வருங்காலத்தில் இளைஞர்களை அதிகமாகக் கொண்டு வந்து சேர்ப்போம் என்ற உறுதியேற்கின்ற கூட்டமாக இந்தக் கூட்டத்தை எடுத்துக் கொண்டு, தேர்வு செய்யப்பட்டு இருக்கின்ற 15 ஆவது உட்கட்சித் தேர்தல் நிர்வாகிகளுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, உங்களுடைய பணி தான், உங்களுடைய அயராத பணிதான், மத்திய சென்னையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர், அவ்வப்பொழுது டில்லிக்குச் செல்லுகின்ற நிலையை உருவாக்குகின்ற வல்லமைப் பெற்ற நிர்வாகிகள்தான் நீங்கள் என்பதை மீண்டும் ஒருமுறை கோடிட்டுக் காட்டி.

எந்த சக்தியாலும், தமிழ கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கின்ற வரையில், வேறு யாருக்கும் இங்கே இடமில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றியைப் பார்த்து, அடுத்து சட்டமன் றத் தேர்தலில், போட்டியிடு வதற்கே யாரும் தயாரில்லை என்ற ஒரு நிலையை உருவாக்கிக் காட்டவேண்டும் என அமைச்சர் .சேகர்பாபு அவர்கள் பேசினார்.

Tags : Dravidian ,M. K. Stalin ,Tamil Nadu ,Minister ,Shekharbabu Sulurai , Dravida model government under the leadership of M. K. Stalin, Tamil Nadu will stand tall: Minister Shekharbabu Sulurai
× RELATED ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த...