×

டேன் டீ தேயிலைத் தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

*மா.கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

கூடலூர் :  டேன் டீ தேயிலைத் தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட சிறப்பு பேரவை மற்றும் கட்டிட நிதி வழங்கும் நிகழ்ச்சி கூடலூரில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பத்ரி, காமராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாசு மற்றும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மா.கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்னன் நிருபர்களிடம் கூறியதாவது:   மத்திய அரசின் நடவடிக்கைகளால் வேலை வாய்ப்பு குறைந்து வேலாயில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஆட்சிக்கு வரும்போது ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றனர். ஆனால் கடந்த எட்டு வருட காலமாக வேலைவாய்ப்புகள் அறிவித்தபடி வழங்கவில்லை. எட்டு வருடத்தில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

தற்போது குஜராத்தில் தேர்தலை மனதில் கொண்டு 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என்கிறார்கள். தனியார் மயம் உலக மயம் ஆனால் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி அளித்தனர். ஆனால் உலக அளவில் தற்போது ஐடி நிறுவனங்கள், ட்விட்டர், அமசோன் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தை அதிகரிப்பதற்காக வேலை வாய்ப்புகளை குறைத்து வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சமூக அக்கறை என்பது கிடையாது. மோடி அரசின் ஆட்சியில் லாபகரமாக இயங்கி வந்த பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு விட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களையும் தனியாருக்கு விற்று வருகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து சாதாரண பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கைத்தறி உற்பத்திகளுக்கும் 14 முதல் 28% வரை ஜிஎஸ்டியை உயர்த்தியதால் உள்ளூர் உற்பத்திகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பொருளாதார சுமை அதிகரித்து வருகிறது.

வேலையில்லா திண்டாட்டம், மாநில உரிமைகளை பறித்தல், விலைவாசி உயர்வு, பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் போட்டி சர்க்கார் நடத்துவது, தமிழ்நாட்டில் ஆளுநர் ரவியின் அரசியல் தலையீடு, இந்தி திணிப்பு போன்றவற்ற எதிர்த்து வரும் டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி துவக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மண்டல அளவில் மிகப்பெரிய இயக்கம் துவக்கப்பட உள்ளது. டிசம்பர் 7 பாராளுமன்றம் கூட உள்ளது. நிலுவையில் உள்ள மின்சார மசோதாவை நிறைவேற்ற உள்ளனர். மசோதாவை நிறைவேற்றினால் மின் விநியோகம் முழுக்க முழுக்க தனியார் மயமாகும். மின்வாரியம் என்பது ஒன்று இருக்குமா என்று சந்தேகம் உள்ளது.

தனியார் தீர்மானிக்கும் கட்டணம் பொதுமக்கள் தலையில் சுமத்தப்படும். விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் குடிசைகளுக்கு இலவசம் மின்சாரம் கிடைக்குமா  100 யூனிட் சலுகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை இனைத்து வலுவான போராட்டம் நடத்தப்படும்.   நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் ஜென்ம ஒழிப்பு ரயத்துவாரி சட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட நிலங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கடந்த  1970ம் ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
கேரளாவில் ஜென்ம ஒழிப்பு நிலங்களில் வசித்த விவசாயிகளுக்கு இஎம்எஸ் நம்பூதிரி பாடு முதலமைச்சர் காலத்தில் நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்காலகட்டத்தில் கலைஞர் ஆட்சியின் கீழ் சுமார் 6ஆயிரம் குடும்பங்களுக்கு 18,000 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டதுடன் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலம் குறித்த பிரச்னைகளை கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை பேசியும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது மீண்டும் திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஆ.ராசாஆகியோரிடம் இது குறித்து பேசி உள்ளோம்.

 பிரிவு 17 இடங்களில் ஒரு பகுதிக்கு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று அந்த நிலப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். பிரிவு 17 இடங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அவர் நிலங்களை வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தற்போதைய திமுக அரசு இப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ன நம்புகிறோம்.  டேன்டீ யில் உள்ள உயர் அதிகாரிகள் அவர்களது சுய லாபத்திற்காக படிப்படியாக மூடும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். தனியார் தொழிற்சாலைகள் லாபத்தில் இயங்கும்போது ஏன் அரசு நிறுவனத்தை இயக்க முடியாது. அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நட்டத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது.

தமிழகத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டம் ஏற்படுவதற்கான முறைகேடுகளை கண்டறிந்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். டேன் டீ நிறுவனத்தின் தேயிலைத் தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவு சரியானது அல்ல. இது தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வாழ்வளிப்பதற்காக கலைஞரால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இதனை வனத்துறைக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையால் இதனை நம்பி உள்ள தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது தொழிலாளர் குடும்பங்களுக்கு தேயிலை தோட்டங்களை பிரித்து வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு  வழங்கும் திட்டம் வரவேற்பு உரியது.டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அண்ணாமலையின் கருத்து ஏற்புடையது அல்ல. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பொது துறையின் பெரும்பகுதி தனியாருக்கு விற்கப்பட்டு விட்டது. லாபத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களை நடத்த முடியாத மத்திய அரசு எவ்வாறு டேன்டீ நிறுவனத்தை நடத்த முடியும். தேவர் சோலை பகுதியில் தனியார் தொழிலைத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இருந்த பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை 25 லட்சமாக வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விபத்துக்கான காரணம் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும். என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu government , Cuddalore: Tamil Nadu government should reconsider the move to hand over tan tea estates to forest department, says Marxist
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...