×

கருக்கலைப்பு மாத்திரைகள் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிபெண் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்ட அமுதா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதாவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கியதும், அவர் முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும் தெரியவந்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர்.

செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர். கருக்கலைப்புக்கான மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார். மேலும், மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

Tags : Minister ,Ma. Subramanyan , Appropriate action will be taken regarding the death of a woman who took abortion pills: Minister M. Subramanian assured
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...