சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240க்கு விற்பனை

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை மற்றும் மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுப முகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை  நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,905-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 உயர்ந்து ரூ.67, 000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.50 உயர்ந்து 67.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: