தமிழ்நாடு ஒரு மகத்தான தமிழ் அறிஞரை இழந்துவிட்டது: அவ்வை நடராசன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்..!

சென்னை: தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தலை சிறந்த தமிழறிஞர் அன்புச் சகோதரர் முனைவர் அவ்வை நடராஜன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் பேராசிரியர், துணை இயக்குநர், மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் என பல பதவிகளை வகித்ததோடு, எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்திலே தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமலேயே அரசுச் செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் அவ்வை நடராஜன்.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர். கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தமிழ்நாடு ஒரு மகத்தான தமிழ் அறிஞரை இழந்துவிட்டது. திரு. அவ்வை நடராசன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாது பேரிழப்பு ஆகும். அவ்வை நடராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: