டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்தவர் கைதி ரிங்கு என திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ கைதியாக திகார் சிறையில் ரிங்கு உள்ளார் எனவும் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது. டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தது பிசியோதெரபி இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.