மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி; டான்போஸ்கோ பள்ளி சாம்பியன் பட்டம்

பெரம்பூர்: பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், பெரம்பூர் டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியும், மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியின் பள்ளி அணியும் மோதின. இறுதியில், பெரம்பூர் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி 3/1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. வெற்றிபெற்ற வீரர்களுக்கு பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஸ்டீபன் ஜோசப் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அதிகாரி சேது ராஜன், உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த, போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Related Stories: