மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கார் மோதி பால்காரர் பலி

ஆலந்தூர்: மீனம்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63). மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை தனது மொபட்டில் மீனம்பாக்கத்தில் இருந்து, ஜிஎஸ்டி சாலையை கடந்து பழவந்தாங்கல் பகுதிக்கு செல்ல முயன்றார். அப்போது, சிக்னல் அருகே வேகமாக வந்த கார் கிருஷ்ணமூர்த்தி மொபட் மீது வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஈரோட்டை சேர்ந்த ஹாரிஸ் சோனு (27) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: