பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் கழுத்தறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புளியந்தோப்பு கே.பி.பார்க் ஏ-பிளாக் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (21). பிளைவுட் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், வீட்டின் அருகே போதையில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ராஜேஷ், தாஸை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

உடனடியாக பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு சென்ற தாஸ், என்னை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், எனக்கூறி ரகலையில் ஈடுபட்டார். அதற்கு போலீசார், போதை தெளிந்தவுடன் வந்து புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். இதை ஏற்காத தாஸ், மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்து மற்றும் மார்பில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் மீது ஏற்கனவே பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: