×

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மென்பொருளை செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிவு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மென்பொருளை செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன.

மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு, சிக்கலுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.தற்போது, மென்பொருட்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு சேவைகளை வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

Tags : Tamil Nadu government , Criminal case registered against the company that crashed the software of the government cable TV company: Tamil Nadu government notification
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...