தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: தெற்கு ரயில்வேயிடம் கனிமொழி எம்பி மனு

சென்னை: தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அதிகாரியிடம் தூத்துக்குடி எம்பி  கனிமொழி மனு அளித்தார். சென்னை  தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்து தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு  கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

குறிப்பாக, தூத்துக்குடியில் இருந்து தினசரி கோவைக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்றும், மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் ‘லோக்மானியா ரயிலை’ தூத்துக்குடியில் இருந்து இயக்குமாறும், திருநெல்வேலி - பாலக்காடு இடையே இயங்கும் ‘பாலருவி எக்ஸ்பிரஸ்’ ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், 3 நடைமேடைகளுடன் இருக்கும் தூத்துக்குடி ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கனிமொழி எம்பி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் வழங்கினர்.

Related Stories: