×

ஏடிபி பைனல்ஸ 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: பெடர் சாதனை சமன்

டுரின்: ஏடிபி பைனல்ஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் 6வது முறையாக  சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்,  சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரின் சாதனையை சமன் செய்தார். சீசன் முடிவு உலக  தரவரிசையில் ‘டாப் 8’ இடங்களை பிடித்த  வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரின் ஒற்றையர் பைனலில் நார்வே வீரர் கேஸ்பர் ரூடுடன் (23 வயது) மோதிய ஜோகோவிச் (35 வயது)  7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 6 வது முறையாக ஏடிபி பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 32 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

ஏற்கனவே 2008, 2012, 2013, 2014, 2015ல்  ஏடிபி பைனல்ஸ் கோப்பையை முத்தமிட்டிருந்த ஜோகோவிச், முன்னாள் நம்பர் 1 வீரர் பெடரரின் சாதனையை சமன் செய்தார். இந்த வெற்றியின் மூலம் 1500 புள்ளிகள் பெற்ற ஜோகோவிச், உலக தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 5வது  இடத்தை பிடித்துள்ளார். ஜோகோவிச்சிடம் போராடி தோற்ற கேஸ்பர் ஒரு  இடம் உயர்ந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Tags : Djokovic ,ATP Finals ,Feder , Djokovic clinches 6th ATP Finals title: Feder equals record
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!