2000 கி.மீ. நீளமுள்ள 873 ஊராட்சி சாலைகள் ரூ.2,178 கோடியில் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தல்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஊராட்சி மற்றும் ஒன்றிய சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துவதற்காக 3435.17 கி.மீ. நீளமுள்ள  1535 ஊராட்சி சாலைகள் தெரிவு செய்து நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் 2000.312 கி.மீ. நீளமுள்ள 873 ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.2178.01 கோடி மதிப்பில் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நிர்வாக ஒப்புதல் கோரி அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த அரசு, முதல்கட்டமாக வரவு செலவு திட்ட மதிப்பீடு 2022-23ல் இருந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என ரூ.600 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: