திருநாவுக்கரசர் எம்பி உறுதி திமுக-காங்கிரஸ் கூட்டணி நன்றாக இருக்கிறது

சென்னை: காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது அல்லது தற்போதுள்ள தலைவரை மாற்றுவது பற்றி மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் டெல்லி போய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை பார்த்திருக்கிறார்கள். தற்போதுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர், தலைவராகி 4 வருஷத்துக்கு மேல் ஆகி விட்டது. சில மாற்று கருத்துகள் இருக்கலாம். அதுபேசி தீர்க்கப்படும். புதிய தலைமையோ, பழைய தலைமையோ மத்திய காங்கிரஸ் தலைமை எடுக்க வேண்டிய முடிவு.

மாற்றம் என்பது யதார்த்தமாக நடக்கக்கூடியது. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ்தான். அதிமுகவில் தற்போது 3, 4 கோஷ்டி உள்ளது. அதை வைத்து பார்த்தால் காங்கிரஸ் தான் 2வது பெரிய கட்சியாக உள்ளது. ராகுல் காந்தி நடைபயணத்தால் காங்கிரஸ் கட்சி நன்றாக வளர்ந்து வருகிறது. இப்போது, தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நன்றாக இருக்கிறது. வரும் எம்பி தேர்தலில் மட்டுமல்ல, அடுத்த சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடரும் என்றார். கட்சி என்று இருந்தால் பிரச்னைகள் இருக்கதான் செய்யும்.

Related Stories: