வரத்து குறைவு, அமாவாசையை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு: பூண்டு ரூ.130; கேரட் ரூ.80; சின்ன வெங்காயம் ரூ.100

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100க்கும், ஊட்டி கேரட் ரூ.80க்கும், ரூ.பெங்களூரு கேரட் 60க்கும், பீன்ஸ் ரூ.25க்கும், பீட்ரூட் ரூ.50க்கும், முருங்கைக்காய் ரூ.70க்கும், வெண்டைக்காய் ரூ.25க்கும், சவ்சவ் ரூ.15க்கும், முள்ளங்கி ரூ.30க்கும், இஞ்சி ரூ.70க்கும் பூண்டு ரூ.130க்கும், பீர்க்கங்காய் ரூ.30க்கும், எலுமிச்சை ரூ.40க்கும், நூக்கல் ரூ.15க்கும், பச்சை மிளகாய் ரூ.50க்கும், சேமகிழங்கு ரூ.30க்கும் சேனைக்கிழங்கு ரூ.25க்கும், பாவக்காய் ரூ.35க்கும், காராமணி ரூ.30க்கும், உஜாலா கத்திரிக்காய் ரூ.30க்கும்  வண்ண குடைமிளகாய் ரூ.70க்கும் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.4 க்கும் புதினா ரூ.3க்கும்  விற்பனையானது. இதுகுறித்து, காய்கறி சிறுமொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகுமார் கூறும்போது, ‘வரத்து குறைவு மற்றும் அமாவாசை என்பதால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.அதேபோல் இன்னும் 2 நாட்களில முகூர்த்த நாள் நெருங்கி வருவதால் மீண்டும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும்.’’ என்றார்.

* பூக்கள் விலையும் கிடுகிடு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. மழை,வரத்து குறைவு காரணமாக நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன. ஒரு கிலோ மல்லி ரூ.1,200க்கும், முல்லை ரூ.600க்கும், ஜாதி மல்லி ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.500க்கும், சாமந்தி ரூ.60க்கும், சம்பங்கி ரூ.75க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர்ரோஸ் ரூ.80க்கும், மஞ்சள் ரோஸ் ரூ.70க்கும் அரளி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறும்போது, ‘‘மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மல்லி, முல்லை, ஜாதி மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை மட்டும் உயர்ந்ததுள்ளது’’ என்றார்.

Related Stories: