வாக்காளர் பெயரை நீக்கும் விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில், ‘‘எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகிறது. இது கடுமையான குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அதனால் வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு இதுதொடர்பான விவரங்களை தெரிவிப்பதுடன் அவரது பதிலையும் கேட்டுப்பெற ஏதுவாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: