புனேயில் பரபரப்பு அடுத்தடுத்து 48 வாகனம் மோதி 38 பேர் படுகாயம்

புனே: புனேயில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 38 பேர் காயம் அடைந்தனர். 48 வாகனங்கள் சேதம் அடைந்தன. அதிருஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நேற்று முன்தினம், புனேயில், புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நவாலே பாலத்தில் நடந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், புனே பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் கூறி உள்ளனர். தப்பி ஓடிய லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: