கட்டணம் ரூ.38 ஆயிரம் இறுதி சடங்கு நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனம்: அஸ்தி கரைக்கும் வரை காரியம் கச்சிதம்

மும்பை: மனிதன் வாழ்வில் மரணம் சோகமானது. அனைத்துமே இயந்திரமயமாகி விட்ட இவ்வுலகில் உயிருடன் இருக்கும் போதே நாமே நமக்கான இறுதி சடங்கை முன்பதிவு செய்வதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு விட்டன. மும்பையை சேர்ந்த இந்த புதிய நிறுவனம், ஒருவரின் இறுதி சடங்குக்கான அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.38 ஆயிரம் வசூலிக்கிறது. ஆம்புலன்ஸ், இறுதி சடங்குகளுக்கான பொருட்கள்,  அஸ்தி கரைப்பது உள்பட அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படும் என்று நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘இதுபோன்ற நிறுவனங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியாவில் புதிது என்பதால் ஆச்சரியமாக பார்க்கின்றனர்’’ என்றனர்.

Related Stories: