மனைவி புகாரில் மபி காங். எம்எல்ஏ மீது பலாத்கார வழக்குபதிவு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்ஹார். இவர் இயற்கைக்கு மாறான உறவு கொள்ள வற்புறுத்துவதாகவும், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும் அவரது மனைவி போலீசில் புகார் கூறி உள்ளார். மேலும், கள்ளக்காதலி சோனாலி பரத்வாஜ் என்பவரின் தற்கொலையிலும் எம்எல்ஏவுக்கு தொடர்பிருப்பதாக  நவ்கான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏ உமாங் சிங்ஹார், ‘‘என் மீது பொய் புகார் கொடுத்து வழக்கில் சிக்க வைத்து விடுவதாகவும் இல்லையென்றால் ரூ.10 கோடி தர வேண்டும் எனவும் அவர் என்னை மிரட்டினார். இது குறித்து ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: