×

சந்திராயன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி

தூத்துக்குடி: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘இந்தியாவில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது மகிழ்ச்சி தருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மென்மேலும் பல பெரிய ராக்கெட்டுகள் விட வேண்டும். தற்போது விண்வெளி நடவடிக்கையாக ராக்கெட் உருவாக்கவும், சாட்டிலைட் உருவாக்கவும் விண்ணப்பித்து வருகின்றனர்.

சந்திராயன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி முழுமை பெற்றதை அடுத்து ராக்கெட் தளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மண் பரிசோதனை முடிவடைந்தபிறகு கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்’’ என்றார்.

Tags : Chandrayan ,ISRO ,Shiva Mati , Chandrayaan to be launched next year: Ex-ISRO chief Sivan interview
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...