திராவிட மாடல் ஆட்சியால் இந்தியாவே திரும்பி பார்க்கிறது: திருச்சி சிவா எம்பி பேச்சு

தாம்பரம்: திராவிட மாடல் ஆட்சியால் இந்தியாவே திரும்பி பார்க்கிறது என திருச்சி சிவா எம்பி கூறியுள்ளார். காஞ்சி வடக்கு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதி, திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எல்.பிரபு, தாம்பரம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் வி.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திமுக பொருளாளரும் பெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலு, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதையடுத்து, திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் திமுக மாநிலங்களவை குழு தலைவரும் கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி என்.சிவா எம்பி, மாநில சுயாட்சி என்ற தலைப்பில் திமுக செய்தி தொடர்புத்துறை துணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், திமுக வர்த்தகரணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், பகுதி செயலாளர்கள் செம்பாக்கம் இரா.சுரேஷ், மாடம்பாக்கம் ஆ.நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பீர்க்கங்காரணை ஆர்.எஸ்.சங்கர், படப்பை மனோகரன், தாம்பரம் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டி.ஆர்.பாலு எம்பி பேசுகையில் சமூக நீதியை நமது இயக்கத்திற்கு நமது இனத்திற்கு கற்றுத்தந்த கலைஞர், அவர் காலத்திலேயே சொன்ன ஐம்பெரும் முழக்கங்கள், ஐம்பெரும் வழித்தடங்களாக இவை எல்லாவற்றையும் இணைத்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இது திராவிட மாடல் ஆட்சி அரசியல் என்று ஸ்டாலின்  சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், இந்த இயக்கத்தை பொறுத்தவரையில் திமுகவில் உழைத்தால்தான் பொறுப்பு வருமே தவிர உழைக்காமல் பொறுப்பு வராது” என்றார்.

திருச்சி சிவா எம்பி பேசுகையில், திராவிடம் மாடல் என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பதை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. திராவிட கழகம் என்பது சமுதாய சீர்திருத்த இயக்கம் என அண்ணா சொன்னதை  மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றார்.

Related Stories: