×

2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்: அதிமுக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு அன்புமணி பதில்..!!

சென்னை: அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு வரும் 2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்து தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் குறித்து அன்புமணி கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்கிறதா என்ற கேள்விக்கு, வரும் 2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். அதற்கான வியூகங்களை 2024ல் பாமக தொடங்கும் என்றும் அன்புமணி கூறினார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு தான் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் திட்டமிடுகிறார்கள் என்று தெரிவித்த அன்புமணி, 30, 40 ஆண்டுகளுக்கு அவர்கள் திட்டமிடுவதில்லை என்றும் கூறினார். மேலும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அன்புமணி, சென்னைக்கு 2ம் விமான நிலையம் அவசியம் என்றும் இது தொடர்பாக பாமக 6 முறை அறிக்கை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். ஆளுநர், ஜனாதிபதி நடுநிலையில் இருக்க வேண்டும் என்று கூறிய அவரவர்கள், அப்படி இல்லை என்பதை போல கேள்விக்குறி எழுந்துள்ளது என்றார். காசி தமிழ் சங்கத்திற்கான விளம்பரத்தை குறைத்திருக்கலாம் என்றும் அன்புமணி கூறினார்.

Tags : BMC ,Anbumani ,AIADMK , 2026, Bamaka, Coalition Government, Anbumani
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...