கிராமத்தின் நடுவே செல்லும் 58 கால்வாய் நீரை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை : உசிலம்பட்டி அருகே கிராமத்தின் நடுவே செல்லும் 58 கால்வாய் நீரை மாற்று வழியில் கொண்டு செல்ல வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாறைப்பட்டி மதகில் இருந்து பாப்பாபட்டி கண்மாய்க்கு லிங்கப்பநாயக்கனூர் கிராமத்தின் நடுவே 58 கால்வாய் நீர் செல்கிறது. இந்நிலையில், ஏராம்பட்டி, வாய்ப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கால்வாயை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாவதாக கூறப்படுகிறது.

மாற்றுப்பாதையில் கால்வாய் நீரை கொண்டு செல்ல வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்த கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோர் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: