×

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

அவர் அளித்த பதில் மனுவில் ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவை கட்சி முறைப்படி முறையாக நடத்தப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மையில்லை என்றும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மட்டுமே அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீர்மானங்களை பற்றி அவர் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறியிருந்தார். எனவே ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மனுவில் கூறியிருந்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்; இந்த வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பொருத்தவரையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

ஏனெனில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த விவகாரம் என்பதால் 6 மாதங்கள் ஆகிறது. எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஓபிஎஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,AIADMK General Committee , Supreme Court adjourned the case related to AIADMK General Committee to 30th
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...