திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அனைத்துவித வாகனங்களும் பாலத்தில் செல்ல தடை விதிப்பு..!

திருச்சி : திருச்சி மாநகரில் காவிரி ஆறு மற்றும் காவிரி பாலம் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. லால்குடி, முசிறி, துறையூர் மற்றும் சுற்று பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் திருச்சி காவிரி பாலம் வழியாக திருச்சி மாநகருக்கு வரவேண்டிய நிலையில், காவிரி பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு முன்பாக 4 சக்கர வாகனங்கள் காவிரி பாலம் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இருசக்கர வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது பாலத்தின் பராமரிப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இருசக்கர வாகனமும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு முழுவதுமாக காவிரி பாலம் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக மட்டுமே திருச்சிக்கு வரவேண்டிய நிர்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காவிரி பாலம் கட்டி 47 ஆண்டுகளான நிலையில் தொடர்ந்து இந்த பாலத்தின் தன்மை குறைந்த காரணத்தினால் அவ்வப்போது புனரமைப்பு பணி நடைப்பெற்று வந்தது. தற்போது முழுவதுமாக பாலத்தை மூடி அடுத்த 3 மாதத்திற்குள் பாலத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: