
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை நிக்கி அய்காக்ஸ் (47), கடந்த சில ஆண்டுகளாக ‘லுகேமியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிக்சை பலனின்றி நேற்று நிக்கி அய்காக்ஸ் காலமானார். இந்த தகவலை அவரது மைத்துனி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2006 - 2008ம் காலகட்டத்தில் சூப்பர்நேச்சுரல் என்ற ஹிட் தொடரில் நடித்த நடிகை நிக்கி அய்காக்ஸ், லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் ஜென்சன் அக்லெஸ் மற்றும் ஜாரெட் படலெக்கியுடன் நடித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.