நியூசிலாந்துடன் நாளை 3வது டி.20 போட்டி: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா?

நேப்பியர்: ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடந்த 2வது போட்டியில் இந்தியா 65 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் 51 பந்தில் நாட்அவுட்டாக 111 ரன் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நாளை நேப்பியர் மைதானத்தில் நடக்கிறது.

இதில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்தும் களம் இறங்குகிறது. நாளைய போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் உள்ளது. நாளை போட்டி நடைபெறும் நேரத்தில் 50 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் போட்டி பாதிக்கப்படலாம்.

Related Stories: