×

ஈரானுடன் மாலையில் பலப்பரீட்சை: வெற்றியுடன் தொடங்க இங்கிலாந்து இலக்கு

* இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல்
* நள்ளிரவு 12.30க்கு அமெரிக்கா-வேல்ஸ் மோதல்

தோகா: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நேற்று தொடங்கியது. 2வது நாளான இன்று 3 போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணி நடைபெறும் போட்டியில், பி பிரிவில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன. கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து இந்த முறைபட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. ஹாரி கேன் தலைமையிலான அணியில் பில் போடென், ஜூட் பெலிங்கம், டெக்லன் ரைஸ் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். மறுபுறம் ஆசியாவின் நம்பர் ஒன் அணியாக உள்ள ஈரான் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது.  

கேப்டன் ஈசன் ஹஜ்சாபி, மேதி தரேமி, அலிஜெரா ஜஹன்பாக்‌ஷ் கவனம் ஈர்க்கும் வகையில் ஆடி வருகின்றனர். 6வது முறையாக உலக கோப்பையில் களம் இறங்கும் ஈரான்  இந்த முறையாவம் லீக்சுற்றை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் ஏ பிரிவில் வலுவான நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 முறை பைனல் வரை சென்றும் பட்டம் வெல்ல முடியாத நெதர்லாந்து இந்த முறை சாதனை படைக்க காத்திருக்கிறது. டென்ஸில் டம்பிரைஸ், விர்ஜில் வான் டிஜ், கோடி கேக்போ, மெம்பிஸ் டிபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மறுபுறம் செனகல் அணியில் காலில்  காயத்தால் முன்னணி வீரர் சாடியோ மனே விலகினாலும்,  ஈடோர்ட் மெண்டி, கலிடோவ் கோலிபே, இத்ரிசா கயே, நம்பால்ஸ் மெண்டி உள்ளிட்டோர மீது எதிர்பார்ப்பு உள்ளது. சர்வதேச அரங்கில் இரு அணிகளும் முதன்முறையாக சந்திக்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு  பிரிவில் அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. உலக கோப்பையில் 11வது முறையாக விளையாடும் அமெரிக்கா இதுவரை பெரிதாக சாதித்தது இல்லை. கிறிஸ்டியன், ஜியாவன்னி, செர்ஜினோ, முசா, ஆடம்ஸ் என இளம்வீரர்களுடன் களம் காண்கிறது.

வேல்ஸ் அணியில் கேப்டன் காரெத்பாலே, துணை கேப்டன் ஆரோன் ஆகியோரையே பெரிதும் நம்பி உள்ளது. 64 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பையில் ஆட தகுதி பெற்றுள்ள நிலையில், லீக் சுற்றில் தாக்கத்தை ஏற்படுத்துமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இரு அணிகளும் இதற்கு முன் 2 முறை மோதி உள்ளன. இதில் ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒன்றில் அமெரிக்கா வென்றுள்ளது.

Tags : Iran ,England , Evening Test with Iran: England aim for a winning start
× RELATED ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில்...