×

தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிப்பிட்டதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக 81% ஆக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

இது வரவேற்கத்தக்க முன்னுதாரணம் ஆகும், அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இது தான் தந்தை பெரியாரின் கொள்கை. இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமூகத்திற்கும் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனவும் கூறியுள்ளார். 


Tags : Government ,Tamil Nadu , Govt should take steps to provide population-wise reservation in Tamil Nadu: Ramadoss insists
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...