பெங்கால் வாரியர்சுடன் இன்று தமிழ்தலைவாஸ் மோதல்

ஐதராபாத்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 90வது லீக் போட்டியில் தபாங் டெல்லி 42-30 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் புனேரிபால்டன் 35-33 என பெங்களூரூ புல்சை அடக்கியது. இன்று இரவு 7.30 மணிக்கு தமிழ்தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் மோதுகின்றன.

ஏற்கனவே இரு அணிகளும் இந்த சீசனில் மோதிய போட்டி 41-41 என சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் உபி.யோத்தா-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories: