×

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை

சென்னை: செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சுமார் ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.

ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. செஞ்சுலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன. செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிதிமுறைகேடு தொடர்பாக சிபிஐ கடந்த 2020-ம் ஆண்டு ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, நிதி நிறுவனம் தொடர்பாக  வழக்கு பதிவு செய்து இந்த வழக்கில் புலன் விசாரணையில் தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.நசுருதீன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது அவர்களுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Red Cross Society ,Enforcement Department , Freezing of assets belonging to administrators of Tamil Nadu branch of Red Cross Society: Enforcement Department
× RELATED அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின்...