×

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி அடுத்து நாட்களில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 420கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. வடதமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்றும் நாளையும் ஆந்திர கடலோர பகுதி, தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை கடலோரப் பகுதி, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Chennai ,Meteorological Department Information , Chennai, Today, Heavy Rain, Weather, Survey, Center, Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...