புதிய தேர்தல் ஆணையர் பதவியேற்பு

புதுடெல்லி: டெல்லியில், புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் பணியில் இருக்கும் நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இவர்  தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தேர்தல் ஆணைய குழுவில் இடம்பெற்றுள்ளார். 1985ம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், இன்று புதிய தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னர், அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பார். பின்னம், 2027ம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: