வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம், நூலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ராணிப்பேட்டை :  வாலாஜா ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் உலக தூய்மை தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டல் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 அதனைத்தொடர்ந்து, கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள், குழந்தைகளை பராமரிக்கும் வழிமுறைகள் மற்றும் ஆரம்ப நிலையில் கல்விக்கான ஊக்குவிப்பு குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம், உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் குறித்து ஆய்வு செய்தார். அங்கனாவடி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க வேண்டும், என்று பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து,  அங்கன்வாடி மையத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு உபரகரணங்களை சீரமைத்து குழந்தைகள் விளையாட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, நூலகத்திற்கு சென்று ஆய்வு ஆய்வு செய்தார். அப்போது நூலத்தில் உள்ளே இருந்த பழுதடைந்த மின் விளக்குகள் ஆகியவற்றை பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, நூலகம் நல்ல முறையில் இயங்கினால், பொதுமக்கள் தாமாக முன்வந்து நூல்களை படிப்பார்கள், இதனால் நல்ல ஒழுக்க நெறிகள் ஏற்பட்டு அறிவுசார்ந்த சமுதாயம் உருவாகும், எனவே நூலகத்தை நல்ல முறையில் பராமரித்து பொதுமக்களை நூலகத்திற்கு வந்து படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

 

மேலும், நூலகத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பிடிஓக்கள் ரவி, பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் வக்கில் மனோகரன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: