திருப்போரூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்கு வழி ஏற்படுத்தித்தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

திருப்போரூர்:  திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் கழிப்பறைக்கு செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி தரவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருப்போரூரில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தி வந்தனர். பேருந்துநிலையத்தில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேற்கூரைகளின் தூண்கள் பழுதடைந்து உடைந்து விழும்நிலையில் இருந்தது. இதனால் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு தளம் போடப்பட்டுள்ளது.

2 உயரத்துக்கு தளம்போடப்பட்டதாலும் வழியை அடைத்து தளம் போடப்பட்டதாலும் கழிப்பறையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது கழிப்பிடத்தை யாரும் பயன்படுத்தாததால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் கழிப்பறைக்கு சக்கர நாற்காலி செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி தரவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: