கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ2 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு, ரூ.2 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த முத்துலட்சுமியின் கணவர் யோகேஸ்வரன் கடந்த 13ம்தேதி அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வருத்தமுற்றேன்.

 உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: