நெல்லை மாவட்டத்தில் நாற்றங்கால் பிரித்து எடுக்கும் பணி தீவிரம்

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக நெல் நாற்றங்கால்களை பிரித்து எடுத்து நடவு பணிக்கு விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் விசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்துவந்தது. இப்பருவமழை போதிய அளவு பெய்யாவிட்டாலும் நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பாளை, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பிசான பருவ நெல் சாகுபடி செய்ய முனைப்புகாட்டி வருகின்றனர். இதற்காக விவசாயிகள் நாற்றுபாவி உள்ளனர். தற்போது நாற்றுகள் வளர்ந்துள்ள நிலையில் நாற்றுநடும் பணிக்காக நாற்றங்கால் பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் அதிகளவு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் பாபநாசம் நீர் இருப்பு 97.90 அடியும், சேர்வலாறு 112 அடியும், மணிமுத்தாறு 79.05 அடியும் தண்ணீர் உள்ளது.

தாமிரபரணி பாசனத்தில் பிசான சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நெல் பயிரிடுவதற்காக பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதற்காக நெல் நாற்றங்காலை பிரித்து எடுத்து நடவு செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.இதற்காக நிலத்தை பதப்படுத்தி உரமிட்டு நாற்றுநடுவதற்காக தயார்படுத்தி உள்ளனர்.

இந்த விளை நிலத்தில் நாற்றங்கால்களை நடவு பணியும் துவக்கி உள்ளனர். ெநற் பயிர்களுக்கு தேவையான யூரியா உரமும் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: