×

கடந்த 10 மாதங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றவர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூல்..!!

சென்னை: கடந்த 10 மாதங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றவர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 4,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்பனை மற்றும் நிர்ணயித்த நேரத்தை கடந்தும் விற்பனை, மறைமுக பார்கள் உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், கூடுதல் விலைக்கு மது விற்றவர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என சமூக ஆர்வலர் காசிமாயன் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி எழுப்பியிருந்த சமூக ஆர்வலர் காசிமாயனுக்கு, டாஸ்மாக் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சென்னை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. 4,658 விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக ஆர்.டி.ஐ. வாயிலாக தெரியவந்துள்ளது. 29 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஈரோட்டில் 397 விற்பனையார்களிடம் இருந்து ரூ.46.84 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.


Tags : Tasmac , Tasmac shop, surcharge, sale of liquor, Rs 5.49 crore fine
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்