சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களில் பயன்படுத்தப்படக்கூடிய திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அந்த திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவின் கூட்டமானது இன்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
ஒன்றிய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதும், அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழக முதலமைச்சரை கொண்டு இந்த குழு உருவாக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த மே மாதம் இந்த குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது 2வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குழுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் துணை தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவிடம் முதன்மை செயலாளர், உறுப்பினர் செயலாளர் ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட அளவில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளை பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையினை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மனித வளங்களின் செயல் திறனை வரிசைப்படுத்தி மதிப்பாறைவு செய்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும் தடைகளை நீக்கி விரைந்து சட்டங்களை செயல்படுத்துவது அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்துவது அல்ல நடுநிலைப் படுத்துவதற்கு உரிய திருத்தங்களை செய்யவும் பரிந்துரைகள் வழங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாநிலங்களவை உறுப்பினர் திருமாவளவன், அதிமுக சார்பில் எம்.எல்.ஏ. செங்கோட்டையன், திமுக சார்பில் எம்.எல்.ஏ. எழிலன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.