×

மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் சத்தமில்லாமல் இறங்கும் டிவிட்டர் அதிபர் எலான் மஸ்க்; ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது..!!

வாஷிங்டன்: டிவிட்டர் ஊழியர்களில் சுமார் 50 விழுக்காடு பேரை அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் ஏற்கனவே பணிநீக்கம் செய்துவிட்ட நிலையில், ஆட்குறைப்பை மேலும் அதிகரிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். டிவிட்டர் சமூக இணையதளத்தை சமீபத்தில் தன்வசப்படுத்திய டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், தலைமை நிர்வாகி உள்ளிட்ட முதன்மை ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். அத்துடன் உலகம் முழுவதும் இருக்கும் தன்னுடைய ஊழியர்களில் 50 விழுக்காட்டினரை வீட்டிற்கு அனுப்பினார் மஸ்க். சுமார் 4,000 பேர் டிவிட்டரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் அதிக பணிநிறுத்தம் மற்றும் பணி பாதுகாப்பு பற்றிய அச்சம் எதிரொலியாக டிவிட்டர் ஊழியர்கள் தாமாக ராஜினாமா செய்து வருகின்றனர். இதனிடையே ஆட்குறைப்பு நடவடிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் சத்தமில்லாமல் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இம்முறை சேல்ஸ் மற்றும் பார்ட்னர் ஷிப் எனப்படும் விற்பனை மற்றும் கூட்டாங்கு குழுக்கள் மீது குறிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாட்களில் ஆட்குறைப்பு பற்றிய முறையான அறிவிப்பை டிவிட்டர் வெளியிடக்கூடும் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இதன் மூலம் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : twitter ,chancellor ,elan ,Musk , Downsizing, Twitter CEO Elon Musk
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு