×

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நியாயமாக நடத்த மருத்துவர்கள் கோரிக்கை..!

சென்னை : தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நியாயமாக நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி இருக்கிறர்கள். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், துணை தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வாக்களிக்க வருகின்ற  ஜனவரி 19-ம் தேதி கடைசி நாள். தபாலில் அனுப்பப்படும் வாக்குகள் ஜனவரி 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட இருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 92,198 மருத்துவர்கள் மட்டும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், பதிவுபெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 1,60,000-க்கு அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வெளிப்படை தன்மையை நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த இக்காலத்தில் தபால் மூலமாக தேர்தல் நடத்துவது முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். மாவட்ட அளவில் வாக்குச்சாவடிகளை அமைத்தோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து ஆன்லைன் மூலமோ தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  


Tags : Tamil Nadu Medical Council elections , Medical, council, election, justice, request
× RELATED தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல்...